உணவை பிரிட்ஜில் வைத்தும் சாப்பிடும் முன் கவனிக்க வேண்டியவை

முதல் நாள் சமைத்த அசைவ உணவை பிரிட்ஜில் வைத்து மறுநாள் சாப்பிடும்போது ஆங்காங்கே பலருக்கும் உடல் நல பாதிப்புகள் உண்டாவது தொடர்கதையாக உள்ளது.

பிரிட்ஜில் வைத்து விட்டால் உணவு கெடாது என பலருக்கும் தவறான கணிப்பு உள்ளது.

ஆனால் ப்ரிட்ஜில் 2 முதல் 8 டிகிரி செல்சியஸில் நாம் வைக்கும் உணவுகள் கெடுவதற்கு நேரம் எடுத்துக் கொள்ளும்; எப்போதும் கெட்டுப் போகாத நிலையை அடையாது என புரிந்து கொள்ள வேண்டும்.

சமைத்த உணவை அன்றே சாப்பிட்டு விடுவது எப்போதும் சிறந்தது. பாதுகாக்க வேண்டும் என்றால் ஓரிரு நாட்களுக்குள் சாப்பிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸூக்குள் பராமரிக்க வேண்டும்.

அதற்கும் மேல் கெடாமல் மாமிசத்தை பாதுக்காக்க வேண்டுமெனில் மைனஸ் 18 டிகிரி செல்ஸியஸுக்கு குறைவான உறை குளிரில் (ஃப்ரீசரில்) பாதுகாக்க வேண்டும்.

அதை எடுத்து நேரடியாக அறை வெப்பநிலையில் வைக்கக்கூடாது.

ஃப்ரீசரில் இருந்து மாமிசத்தை எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்து 15 - 30 நிமிடங்கள் கழித்து எடுத்தாலே ஐஸ் விட்டிருக்கும். இப்படித்தான் 'டீ ஃப்ராஸ்டிங்' செய்ய வேண்டும்.

அசைவமோ அல்லது சைவமோ உணவை சமைக்கும் போது, பரிமாறும் போது, பாதுகாக்கும் போது சுத்தத்தை உறுதி செய்ய வேண்டும்.

உணவை குறிப்பாக மாமிச உணவை நல்ல சூட்டில் முறையான நேரம் அனுமதித்து சமைக்க வேண்டுமென அரசு பொதுநல டாக்டர் ஃபரூக் அப்துல்லா அறிவுறுத்தியுள்ளார்.