அச்சுறுத்தும் நானோ பிளாஸ்டிக்

நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் சார்ந்த பொருட்கள், சுற்றுப்புற சூழல்களில் மாசுக்களாக கலந்துள்ள பிளாஸ்டிக் துகள், உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு பாதிப்புகளுக்கு வழிவகுக்கிறது.

சமீபத்தில் பிறந்த குழந்தைகளின் நஞ்சுக்கொடியில், பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், வடக்கு அட்லாண்டிக் கடலில் 2.7 கோடி டன் 'நானோ' பிளாஸ்டிக் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது கடல் உணவுச்சங்கிலியை பாதித்து கடல்வாழ் உயிரினங்களை அழிக்கும் திறன் கொண்டது.

மேலும், மனித உடல் உறுப்புக்குள் ஊடுருவும் ஆபத்து மிக்கது என ராயல் நெதர்லாந்து கடல் ஆராய்ச்சி நிறுவனம், யுட்ரெட்ச் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது.

ஒரு மைக்ரோமீட்டருக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் துகள், நானோ துகள் எனப்படுகிறது. இதை கண்ணால் பார்க்க முடியாது.

பெரிய பிளாஸ்டிக் உடைவதில் இருந்து இந்த நானோ பிளாஸ்டிக் துகள் உருவாகிறது.