உடல்நலத்தை காக்கும் நடைபயிற்சி

உடல்நலத்துக்கு தினசரி உணவு எப்படி முக்கியமோ, அதுபோல உடற்பயிற்சியும் அவசியம்.

தினமும் குறைந்தது 45 நிமிடம் நடக்க வேண்டும் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், தினமும் 7 ஆயிரம் அடி நடப்பது, முன்கூட்டி இறப்பை 47 சதவீதம் தடுக்கிறது என 'தி லான்செட்' ஆய்வு தெரிவித்துள்ளது.

இதில், 1.60 லட்சம் பேரிடம் நடத்திய 57 ஆய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.

தினசரி 5000 - 7000 அடி நடப்பவர்களுக்கு மன அழுத்தம், இதய பாதிப்பு, டைப் - 2 நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்கு தீர்வு கிடைக்கிறது என தெரிவித்துள்ளனர்.

எனவே, நடையை அதிகரிக்க, லிப்ட் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்த்து, மாடிப்படிகளில் நடந்து செல்லலாம்.

மொபைல் போனில் பேசும் நேரங்களில், சற்று நடக்க முயற்சிக்கலாம்.

பார்க்கிங்கில் வாகனங்களை சற்று தூரமாக நிறுத்தி விட்டு, அலுவலகத்திற்கு நடந்து செல்லலாம்.