ஆஸ்துமா என்பது காற்றை நுரையீரலுக்கு எடுத்துச் செல்லும் சுவாசக்குழாய்களைப் பாதிக்கும் ஒரு நோயாகும்.

மூச்சுத்திணறல், சளியுடன் கூடிய இருமல், சுவாசக்கோளாறு போன்றவை ஆஸ்துமாவின் அறிகுறிகளாகும்.

திப்பிலியுடன் தூதுவளை, மிளகு, சுக்கு, தாளிசபத்திரி ஆகியவற்றைச் சேர்த்து கசாயமாக்கி, தேன் கலந்து சாப்பிட நிவாரணம் கிடைக்கும்.

முசுமுசுக்கை கீரையைச் சாறு எடுத்து, அதில் திப்பிலியை ஊறவைத்து, பின்னர் பொடியாக்கி தேன் விட்டுக் கலந்து வெற்றிலையுடன் சாப்பிடலாம்.

பலாப்பழ வேரை வேக வைத்த தண்ணீருடன், பலாப்பழ சாறைக் கலந்து சாப்பிட நாளடைவில் ஆஸ்துமா கட்டுக்குள் இருக்கும்.

கண்டங்கத்தரியைச் செடியை வேருடன் பிடுங்கி நிழலில் உலர்த்தி பொடியாக்கி, தேனுடன் கலந்து தொடர்ந்து சாப்பிட நிவாரணம் கிடைக்கும்.

வீட்டினுள் செல்லப்பிராணிகளுடன் அதிக நேரம் செலவிடுவதை முடிந்தளவு தவிர்க்கலாம். அவைகளிடம் இருந்து உதிரும் ரோமங்கள் மற்றும் தூசிகளும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.