கர்ப்பிணிகளுக்கு ஏன் எட்டாவது வாரத்தில் நீரிழிவு பரிசோதனை?
தாயின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு, இன்சுலின் சுரக்கும் பீட்டா செல்கள், 11வது வாரத்தில் செயல்பட ஆரம்பிக்கும்.
தாயின் சர்க்கரை அளவு 110எம்ஜி/டிஎல் அளவிற்கு குறைவாக இருந்தால் வயிற்றில் வளரும் குழந்தையின் பீட்டா செல்கள் இயல்பாக செயல்படும்.
இதற்கு மேல் இருந்தால், இன்சுலின் அதிகம் சுரந்து, தாயின் குளூக்கோஸை அதிகமாக பயன்படுத்தி, பிறவி கோளாறுகளுடன் குழந்தை பிறக்கலாம்.
ஆரோக்கியமாக பிறந்தாலும், 17 வயதிற்கு பிறகு நீரிழிவு பாதிப்பு, உடல் பருமன் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
இப்படிப்பட்ட குழந்தைகள், திருமணத்திற்கு முன்பே நீரிழிவு பாதிப்பு உள்ளவர்களாகவும் மாறுகின்றனர்.
எனவே, எட்டாவது வாரத்தில் ரத்த சர்க்கரையின் அளவு 120 எம்ஜி/டிஎல் அளவிற்கு அதிகமாக இருந்தால், டாக்டரின் ஆலோசனைப்படி மருந்து உட்கொள்ளலாம்.
15 நாட்களுக்கு ஒரு முறை பரிசோதனை செய்து கர்ப்ப காலம் முடியும் வரை, குறிப்பிட்டளவுக்குள் வைத்திருப்பது அவசியம்.