வைட்டமின் டி சத்தால் புற்றுநோய், நீரிழிவு, இதய பாதிப்பு தடுக்கலாம்: ஆய்வில் தகவல்!

சூரிய ஒளியிலிருந்து வரும் புற ஊதா கதிர்கள் - பி (UVB) மூலம் நம் உடலே வைட்டமின் டி3 மற்றும் டி2-வை உற்பத்தி செய்யும்.

மாத்திரைகள் மற்றும் கொழுப்பு நிறைந்த மீன்கள், மஞ்சள் கரு, பாலாடைக்கட்டி, தானியங்கள், ஆரஞ்சு சாறு போன்ற பல்வேறு உணவுகளில் வைட்டமின் டி3 அதிகம் உள்ளது.

வைட்டமின் டி என்றாலே எலும்புக்கு வலு சேர்க்க தேவையான சத்து என பலரும் அறிந்திருப்போம்.

ஆனால், புற்றுநோய், டைப் 2 நீரிழிவு, இதய பாதிப்பு போன்ற பல நோய்கள் வராமல் வைட்டமின் டி தடுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எனவே, வைட்டமின் டி சத்துக்களை பெறும் வகையில் வெயிலில் சிறிது நேரம் செலவிடுங்கள்.

பால், மீன் ஆகியவற்றை அடிக்கடி டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம்.