பத்ரிநாத், கேதார்நாத் செல்ல விரைவில் ரயில் சேவை
உத்தராகண்ட் மாநிலத்திலுள்ள கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய 4 கோவில்களை தரிசிக்கும் யாத்திரையின் பெயரே சார்தாம்.
ஆண்டுதோறும் இந்த யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மலைப்பகுதியில் இருக்கும் கரடுமுரடான பாதைகள், செங்குத்தான வளைவுகள் என பல்வேறு சவால்களை பக்தர்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.
குறைந்தப்பட்சமாக 1.5 நாள் பயணம் என்பதால், சார்தாம் யாத்திரை என்பது அவ்வளவு எளிதானதோ, சுகமானதோ அல்ல.
குறிப்பாக பத்ரிநாத் செல்ல ரிஷிகேஷில் இருந்து பொது போக்குவரத்து அல்லது வாடகை கார், ஜீப் மூலமாகவோ மட்டுமே பக்தர்கள் செல்ல முடியும்.
பக்தர்களின் இந்த யாத்திரையை எளிதாக்க ரிஷிகேஷ் மற்றும் கர்ணபிரயாக்கில் இருந்து புதிய ரயில்வே பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில்வே பாதை திட்டத்தால் உத்தராகண்டின் இமயமலையிலுள்ள இந்த 2 முக்கிய கோவில்களுக்கும் பக்தர்கள் இனி நிம்மதியாக சென்று வரலாம்.
ரயில் பாதை அமைக்கும் பணிகள் 90 சதவீத அளவுக்கு முடிந்துள்ள நிலையில் 2027ம் ஆண்டுக்குள் ரயில் போக்குவரத்து துவக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இப்புதிய ரயில்வே பாதை 125 கி.மீ., தூரமாகும்; 105 கி.மீ., தூரத்துக்கு குகைகள் தான். சேவை துவங்கப்பட்டால், ரிஷிகேஷ் - பத்ரிநாத் பயணம், 8 மணி நேரமாக குறையும்.
ரிஷிகேஷிலிருந்து கர்ணபிரயாக் வரை 2 மணி நேரத்தில் சென்றுவிடலாம். பின், அங்கிருந்து சாலை வழியாக 6 மணி நேரம் பயணித்தால் பத்ரிநாத்தை அடையலாம்.
பக்தர்கள் சுமர்பூர் வரை, ரயிலில் 1.5 மணி நேரத்திலும், பின், சாலை மார்க்கமாக கேதார்நாத் மலை ஏற்ற அடிவாரத்துக்கு 4 மணி நேரத்தில் சென்றுவிடலாம்.