இமையில் அழகிய கோடு... கண் அழகை கூட்டும் ஐலைனர்!
கண்களுக்குத் தனித்துவமான, அழகையும் வசீகரத்தையும் தரக்கூடியது ஐலைனர்.
இதில் பல வகைகள் உள்ளதால், சரியானவற்றைத் தேர்ந்தெடுத்து முறையாகப் பயன்படுத்துவது முக்கியம்.
உங்கள் பார்வையின் ஹைலைட் கண் இமைகளே. அந்த இமைகளுக்கு வித்தியாசமான வடிவங்கள் தரும் கிராபிக் ஐலைனர், இப்போது ட்ரெண்டில் உள்ளது.
கண்களுக்கு அடர்த்தியான கருமையை விரும்புபவர்கள், பிரஷ் பயன்படுத்திப் போடும், ஜெல் ஐலைனரை பயன்படுத்தலாம்.
இது நீண்ட நேரம் அழியாமல் இருப்பதுடன், கண் இமைகளைத் தடித்தும் காட்டும்.
மென்மையான, ஸ்மோக்கி தோற்றத்திற்கு எளிதாகப் பயன்படுத்தக்கூடியது, பென்சில் ஐலைனர்.
அதேபோல், இமைகளில் துல்லியமான கோடுகளை வரைய, லிக்விட் ஐலைனர் சிறந்ததாகும். இதில் 'பென்' வடிவம், பயன்படுத்த எளிதானது.
ஐலைனருக்கு எப்போதும் கருப்பு நிறம்தான் பயன்படுத்த வேண்டுமென்பதில்லை. ஆடை ஏற்ப நீலம், பச்சை, மஞ்சள் போன்ற, 'கலர் ஐலைனர்களையும்' பயன்படுத்தலாம்.