சமையல் மணக்க ருசிக்க என்ன செய்யலாம்? டிப்ஸ்.. டிப்ஸ்...
தேங்காய் சட்னி செய்யும் போது, சின்ன வெங்காயம் தாளித்து சேர்த்தால் கூடுதல் சுவையாக இருக்கும்.
தண்ணீர் ஊற்றி வைத்த பாத்திரத்தில் கல் உப்பு, மஞ்சள் பவுடர் சேர்த்து அதனுடன் காலிபிளவரை போட்டு 15 நிமிடம் ஊற வைத்து, பின் பக்கோடா செய்தால் மொறுமொறுப்பாக வரும்.
இறைச்சி வேக வைக்கும்போது, கால் டீஸ்பூன் சர்க்கரை சேர்த்தால் இறைச்சி நன்றாக வெந்துவிடும்.
வீட்டில் கோதுமை அல்வா செய்யும்போது, மாவை கரைக்கும்போது தண்ணீர் அதிகமாகிவிட்டால் சிறிதளவு சோள மாவு சேர்த்து செய்தால் அல்வா கெட்டியாகவும், சுவையாகவும் இருக்கும்.
வத்தக்குழம்பில் உப்பு அதிகமாகிவிட்டால் கவலை வேண்டாம். தேங்காய் பால் சேர்த்தால் சரியாகிவிடும்.
பன்னீர் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்க, அதன் மீது வினிகர் தடவி வைக்கலாம்.
இட்லியை சிறு துண்டாக நறுக்கி, வெண்ணெயில் பொரித்து காய்கறி சூப்பில் போட்டால் புது சுவை தரும்.
உருளை கிழங்கு கிரேவி செய்யும்போது, புளிப்பு இல்லாத கெட்டி தயிரை ஊற்றி வதக்கினால் சுவையாக இருக்கும்.
முட்டைகோஸ், பட்டாணி, கீரை வேகவைக்கும்போது சிறிது சர்க்கரையும், வெந்த பின் உப்பும் சேர்த்தால் சுவையாக இருக்கும்.