விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் தேங்காய்ப்பூரண கொழுக்கட்டை!
தேவையான பொருட்கள்: பச்சரிசி மாவு - ஒரு கப், தண்ணீர் - இரண்டு கப், மேல் மாவுக்கு நெய்- - ஒரு தேக்கரண்டி, தேங்காய்த் துருவல் - ஒரு கப்
பொடித்த வெல்லம் - முக்கால் கப், ஏலக்காய்த்துாள் - அரை தேக்கரண்டி, நெய் பூரணத்துக்கு - ஒரு மேஜைக்கரண்டி, உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: வாணலியில் தண்ணீர், உப்பு, ஒரு தேக்கரண்டி நெய்விட்டு, அடுப்பில் வைக்கவும்.
வாணலியை மூடி வைக்கவும். இரண்டு நிமிடம் கழித்து, வாணலியைத் திறந்து நன்றாக கிளறி, மாவு கெட்டியானவுடன் அடுப்பை அணைத்து, வாணலியை மூடி வைக்கவும்.
இன்னொரு வாணலியில் நெய்யை சூடாக்கி, தேங்காய்த்துருவல், பொடித்த வெல்லம் சேர்த்து கிளறவும்.
எல்லாம் சேர்ந்து வரும் போது ஏலக்காயத்துாள் போட்டுக் கலந்து இறக்கி வைக்கவும். இது தான் தேங்காய்ப் பூரணம்.
வேக வைத்த மாவை கட்டி இல்லாமல் பிசைந்து, அதிலிருந்து ஒரு உருண்டை எடுத்து, எண்ணெய் தொட்டு, கை விரல்களால் அழுத்தி சிறு கிண்ணம் போல் செய்யவும்.
நடுவில் தேங்காய் பூரணம் கொஞ்சம் வைத்து மூடி, வேண்டிய வடிவத்தில் கொழுக்கட்டையாக செய்யவும்.
இப்படி எல்லாவற்றையும் செய்து, இட்லி தட்டில் வைத்து, 10 நிமிடங்கள் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். தேங்காய்ப்பூரண கொழுக்கட்டை தயார்.