விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் ஜவ்வரிசி கீரை வடை!

தேவையான பொருட்கள்: மாவு ஜவ்வரிசி - இரண்டு கப், பொட்டுக்கடலை மாவு - அரை கப், அரிசி மாவு - இரண்டு மேஜைக்கரண்டி

சுத்தம் செய்து நறுக்கிய அரைக்கீரை - அரை கப், மிளகாய்த்துாள் - ஒரு தேக்கரண்டி, பெருங்காயத்துாள் - கால் தேக்கரண்டி

சீரகத்துாள் - அரை தேக்கரண்டி, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் பொரிக்க - தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயை சூடாக்கி, ஜவ்வரிசியை நன்றாக பொரியும் வரை வறுத்து எடுத்து, தண்ணீர் விட்டு அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் ஊறிய ஜவ்வரிசி, பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவை கலக்கவும்.

பின் அதில் நறுக்கிய கீரை, மிளகாய்த்துாள், பெருங்காயத்துாள், சீரகத்துாள், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கலந்து தண்ணீர் விட்டுக் கெட்டியாக பிசையவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி, மாவை வடைகளாகத் தட்டிப் போடவும்.

நன்றாக வேகவிட்டு பொன் நிறமாக மாறியவுடன் எடுக்கவும். ஜவ்வரிசி கீரை வடை ரெடி.