மார்பக கேன்சர் அதிகரிக்க என்ன காரணம்?

50 ஆண்டுகளுக்கு முன், பெரும்பாலும் வேக வைத்து சாப்பிட்ட நிலையில், இன்று பதப்படுத்திய, துரித உணவுடன் கலப்படமும் அதிகமாகி விட்டது.

அசைவ உணவுகள் இன்னொரு காரணம். ஓரிரு குழந்தைகள் பெறுவது, தாய்ப்பால் தராதது சில காரணிகள்.

முதல் மாதவிடாய் துவங்கியதிருந்து 10 ஆண்டுகளுக்குள் குழந்தை பெற வேண்டும். 30 வயதிற்கு மேல் முதல் குழந்தை பெறுபவர்களுக்கு மார்பக கேன்சர் வாய்ப்பு அதிகம்.

அதிக ஆண்டுகள் தாய்ப்பால் கொடுப்பதால் மார்பக கேன்சர் வரும் வாய்ப்பு மிகவும் குறைவு.

ஒன்றிரண்டு குழந்தைகள் பெற்று 4 ஆண்டுகள் தாய்ப்பால் கொடுத்தால் கூட, மொத்த கால அளவு குறைவு என்பதால் மார்பக கேன்சர் வரும் வாய்ப்பு அதிகம்.

மார்பக கேன்சருக்கு காரணம் பெண் தன்மையுள்ள ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன். இது கர்ப்பப்பை அருகில் உள்ள சினைப்பையில் சுரக்கிறது.

அதனுடைய துாண்டுதலால் தான் மார்பகங்கள் வளர்கின்றன. இயல்புக்கு அதிகமாக துாண்டும் போது கேன்சர் வருகிறது.

கொழுப்பு செல்களிலும் ஈஸ்ட்ரோஜென் சுரக்கும். உடல் பருமன் அதிகமிருந்தால், கொழுப்பு செல்கள் அதிகமிருக்கும். ஈஸ்ட்ரோஜென் அதிகம் சுரக்கும் போது கேன்சர் வரும்.

மரபியல் காரணிகளால் வரும் 10 சதவீத கேன்சரை, மரபணு பரிசோதனை வாயிலாக முன்கூட்டியே கண்டறிய முடியும்.