மாரத்தான் ஓட்டத்தின்போது கவனம் தேவை
மாரத்தான் ஓட்டத்தின் போது சிலர் மயங்கி விழுந்து உயிரிழக்கின்றனர். வேகமாக ஓடும் போது, இதயத் தசைகள் ஓரளவிற்கு மேல் சுருங்காது.
ரத்த ஓட்டமின்றி மூளை, சிறுநீரகங்கள் முதலில் பாதிக்கப்படும். மயக்கம் வந்து கீழே விழுந்து விடுவர். இதயத்திற்கு சிறிது நேரம் ஓய்வு தந்தால் மட்டுமே இயல்பாக ரத்தம் வெளியேறும்.
இதயத்தின் தசைகள் சுருங்கி விரியும் தன்மை தான் அதனுடைய திறனை காட்டுகிறது. இதய அறைகளின் செயல்பாட்டை பொருத்தே தசைகளின் தடிமன் இருக்கும்.
தடகள வீரர்கள் உட்பட கடினமான பயிற்சி செய்பவர்களுக்கு, இதயத் தசைகள் தடிக்கும். எனவே, எதிர்பாராத சமயங்களில் மயக்கம் வரும்.
உடல் தகுதி, இதய ஆரோக்கியம் பற்றி தெரியாமலேயே பலரும் சென்று மாரத்தானில் கலந்து கொள்கின்றனர்.
பிறவியிலேயே வால்வு சுருங்கி இருந்தால், ஆரம்பத்தில் எதுவும் தெரியாது. 20 வயதிற்கு மேல், தடகள விளையாட்டு, ஜிம்னாஸ்டிக், நடனம் என்று ஆடும் போது, மயங்கி விடுகின்றனர்.
நடை பயிற்சி தான் இதயத்தை சீரான நிலைக்கு கொண்டு வரும். இதயத் தசைகள், இதயம், நுரையீரல் செயல்பாடு சீராக இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம்.
ரத்த நாளங்கள், இதய அறைகள் நன்றாக இருக்கிறதா என்று உறுதி செய்த பின் ஓடலாம்.
ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் ஓடும் போது, காற்று சரியாக இருக்காது. ஈரப்பதம் அதிகமுள்ள கடற்கரை காற்றில் ஆக்ஸ்சிஜன் குறைவாக இருக்கும்.