எடை குறைவாக பிறக்கும் குழந்தைகள்

கேரள சுகாதாரத்துறை சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், கடந்தாண்டு நடந்த பிரசவத்தில், 7ல் 1 குழந்தை 2.5 கிலோவுக்கு கீழ் எடையுடன் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும், மாநிலத்தில் சிசு மரண விகிதம் 1 % மட்டுமே உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் குழந்தைகள் எடை குறைவாக பிறப்பது அதிகரித்துள்ளது.

பொதுவாக, குழந்தைகளின் எடை, 2.5 கிலோ முதல் 3.5 கிலோ வரை இருக்க வேண்டும். இதில் குறைவு ஏற்படும் போது சுகாதார பிரச்னைகள் உருவாகிறது.

இது, குழந்தைகளின் உயிருக்கு ஏற்படும் அச்சுறுத்தலாக கருதப்படுகிறது. கூடுதல் கவனிப்பு இருந்தால் மட்டுமே குழந்தையை இயல்பு நிலைக்குக் கொண்டு வர முடியும்.

கர்ப்பிணிகளுக்கு ஏற்படும், ரத்த சோகை, உயர் ரத்த அழுத்தம் மற்றும் குறைமாத பிரசவம் போன்றவையே, பிறக்கும் குழந்தைகள் எடை குறைவாக இருக்க முக்கிய காரணமாகும்.

சுத்தமான தண்ணீரின்மை, சுகாதாரமின்மை, கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு, மன அழுத்தம், வாழ்க்கை முறை ஆகியவை எடை குறைய கூடுதல் காரணமாகும்.

பொதுவாக, பழங்குடியின பெண்கள் பிரசவிக்கும் போது, எடை குறைவாக குழந்தை பிறக்கும். தற்போது, அனைத்து தரப்பிலும், சிசு எடை குறைவாக காணப்படுவது கவலையளிக்கிறது.

எனவே, பெண்களுக்கு ஊட்டச்சத்து ஆலோசனை வழங்கவும், கர்ப்பிணிகளுக்கு உடல் பரிசோதனைகளும் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.