உயிர் காப்போம்... உலக முதலுதவி தினம் இன்று!
உடல்நிலை பாதிக்கப்பட்ட ஒருவருக்கு உரிய சிகிச்சை கிடைக்கும் வரை, இருப்பதை கொண்டு அவசரநிலை பராமரிப்பை மேற்கொள்வதே முதலுதவி.
விபத்தில் காயம் அடைபவர்களுக்கு சரியான நேரத்தில் முதலுதவி வழங்கினால், அவர்களின் மரணத்தை தடுக்கலாம்.
முதலுதவி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த உலக ரெட்கிராஸ் அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் செப்., இரண்டாவது சனி (செப்.13) உலக முதலுதவி தினமாக கடைபிடிக்கபடுகிறது.
பாதிப்புக்கு ஏற்றவாறு முதலுதவி எப்படி செய்ய வேண்டும் என மக்களுக்கு பயிற்சியளிப்பது முக்கியமான ஒன்றாகும்.
'முதலுதவி மற்றும் காலநிலை மாற்றம்' என்பது இந்தாண்டின் 'தீம்' ஆகவுள்ளது.
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வெள்ளம், காட்டுத்தீ, புயல்கள் மற்றும் வெப்ப அலைகள் போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளின் அதிகரித்து வரும் பாதிப்பை இது வலியுறுத்துகிறது.
இதுபோன்ற சூழ்நிலைகளில் அவசரநிலைகளுக்கு ஏற்ப மேற்கொள்ளும் முதலுதவி திறன்களின் முக்கியத்தும் வலியுறுத்தப்பட்டுள்ளது.