ஹெல்த்தியான பாசிப்பருப்பு புட்டு !

தேவையானப் பொருட்கள்: பாசிப்பருப்பு - 200 கிராம், வெல்லம் - 100 கிராம், தேங்காய் துருவல் - 1 கப், ஏலக்காய் பொடி, நெய், தண்ணீர் - தேவையான அளவு.

பாசிப்பருப்பை நன்கு வறுத்து, இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

பின், வடிகட்டி மிக்ஸி ஜாரில் நைசாக அரைக்கவும்.

அரைத்த மாவை, இட்லி தட்டில், ஆவியில் வேக வைத்து, ஆறிய பின் உதிர்க்கவும்.

இதனுடன், தேங்காய் துருவல், ஏலக்காய்பொடி, நெய், பொடியாக்கிய வெல்லம் கலக்கவும்.

இப்போது சுவையான மற்றும் ஆரோக்கியமான பாசிபருப்பு புட்டு ரெடி.