டிமென்ஷியா அறிகுறிகள் அறிவோமா...
வயதாகும் போது நரம்பு செல்கள் சிதைவதால், டிமென்ஷியா, அல்சைமர்ஸ், பார்க்கின்சன்ஸ் போன்ற நோய்களும் வரலாம்.
அல்சைமர்ஸ் நோயும் பெண்களை ஆண்களை விட மூன்று மடங்கு அதிகம் பாதிக்கிறது என டாக்டர்கள் கூறுகின்றனர்.
ஒரு இடத்தில் வைத்த பொருளை மறப்பது, கையில் வைத்துக் கொண்டே தேடுவது, டிமென்ஷியாவின் முதல் நிலை.
சாப்பிட்ட சிறிது நேரத்தில் சாப்பிட்டோமா இல்லையா என்று நினைவில் வராது.
காலை உணவு சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில், என்ன சாப்பிடீர்கள் என்று கேட்டால் நினைவில் இருக்காது. இது அடுத்த நிலை. இந்த அறிகுறிகள் ஓராண்டு இருக்கலாம்.
அடுத்த நிலையில், சிறுநீர் கழிக்க பாத்ரூம் செல்ல வேண்டும் என்பதை மறந்து வேறு அறைக்கு செல்வது, தீவிர நிலையில், வீட்டை விட்டு வெளியில் சென்றால் திரும்ப வீட்டிற்கு வரத் தெரியாது.
குழந்தைகளின் பெயர் மறந்து விடும். கடைசி கட்டத்தில் வாயில் வைத்த உணவை விழுங்க கூடத் தெரியாமல், தன்னையே மறந்துவிடுவார்கள். இப்படி ஒவ்வொரு கட்டமாகத்தான் தீவிரமாகும்.
ஆரம்ப நிலையிலும் டிமென்ஷியா, அல்சைமர்ஸ் நோய்களுக்கு மருந்துகள் உள்ளன. ஆனால் 10, 20 சதவீதம் மட்டுமே குணமாவது தெரியும்.
நரம்பியல் கோளாறுகளை வருமுன் தடுப்பதே நல்லது. நரம்பு செல்கள் சிதைந்தால், அதை பழைய நிலைக்கு கொண்டு வரவே முடியாது என கூறப்படுகிறது.