குடல் மைக்ரோபயோம் என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் இதோ !
குடல் மைக்ரோபயோம் என்பது, மனிதர்களின் செரிமான மண்டலத்திலுள்ள பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் உள்ளிட்ட நுண்ணுயிரிகள் அமைப்பு.
இவை சரியாக இருந்தால் தான், நோய் எதிர்ப்பு சக்தி, மனநிலை, ஊட்டச்சத்து கிரகிப்பு அனைத்தும் சரியாக இருக்கும்.
இதை மேம்படுத்த, நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு, பழம், காய்கறி அதிகம் உண்பது நல்லது.
மன அழுத்தம் மற்றும் வாழ்வியல் நடைமுறைகள் ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்துடன் இணைந்த ஒன்று.
மன அழுத்தம், துாக்கமின்மை, சீரற்ற உணவு, உடற்பயிற்சி இல்லாமை ஆகியவற்றால் குடலில் நுண்ணுயிரிகளின் சமநிலை பாதித்து, செரிமான கோளாறுகளை உருவாக்குகிறது.
பசியின்மை, அடிக்கடி வயிற்றுப்போக்கு, தொடர் வயிற்றுவலி, மலம் அல்லது வாந்தியில் ரத்தம், காரணமில்லாத எடை குறைவு போன்றவை இருந்தால் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும்.
உணவு செரிமானம், குடல் செயல்பாடுகள், சரியாக இருந்தால் பல நோய்கள் வராமல் தடுக்கலாம் என்பது டாக்டர்களின் அட்வைஸாகும்.