தைராய்டு: இரவில் சாப்பிட வேண்டிய உணவுகள்

தினமும் இரவு தேங்காய் துண்டுகளை சாப்பிட்டு வந்தால் தைராய்டு சுரப்பி ஆரோக்கியமாக இருக்க உதவும்.

முந்திரிப் பருப்பில் செலினியம் என்ற தாதுச்சத்து அதிகம் உள்ளது. 4-5 முந்திரிப் பருப்பை ஊற வைத்து இரவில் சாப்பிட்டு வந்தால் தைராய்டு திசுக்களைப் பாதுகாக்க உதவும்.

பூசணி விதைகளில் அதிகளவு துத்தநாக சத்து உள்ளது. வறுத்த பூசணி விதைகளை தொடர்ந்து இரவு நேரத்தில் சாப்பிட்டு வந்தால் தைராய்டு சுரப்பி செயல்பாட்டை சீராக்கும்.

சிறிதளவு சியா விதைகளைத் தினமும் ஊறவைத்து இரவில் சாப்பிடுவதால், இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் தைராய்டின் வீக்கத்தை குறைக்கும்.