இன்று மகா சிவராத்திரி !
மகா சிவராத்திரி என்பது பல கல்பகோடி இரவுகள் சேர்ந்து வந்த ராத்திரி. பல இரவுகளிலும் செய்கின்ற பூஜையின் பலனை மகாசிவராத்திரி பூஜை ஒன்றே கொடுத்துவிடும் என்கின்றனர் சித்தர்கள்.
இந்தாண்டு மகா சிவராத்திரி இன்று (பிப்.,18) கடைபிடிக்கப்படுகிறது. ஈசனின் 5 முகத்தை நினைவூட்டும் விதமாகவும், பஞ்சபூதங்களின் தத்துவங்களை விளக்கும் விதமாகவும் 5 வித சிவராத்திரிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
ஏதாவது ஒரே ஒரு சிவராத்திரி விரதம் இருந்தாலே போதும் மனிதப் பிறவி எடுத்ததற்கான பலனை அடைந்துவிட முடியும் என்கிறார் அகத்தியர்.
மகா சிவராத்திரி விரதமானது எம பயத்தை நீக்கும். சிவனடியார்களை எமதூதர்கள் நெருங்க அஞ்சுவார்கள் என சிவ புராணம் கூறுகிறது.