மாதவிடாய் பெண்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்கும் நாடுகள்..!
முதல் ஐரோப்பிய நாடாக மாதவிடாய் சமயத்தில் பெண்களுக்கு விடுமுறையை அறிவித்துள்ளது ஸ்பெயின். மாணவிகள், பெண் கைதிகளுக்கு சானிடரி நாப்கின்கள் இலவசமாக கிடைக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
2017ல் தெற்கு ஆப்ரிக்க நாடான ஜாம்பியா மாதவிடாயின் போது பெண்களுக்கு விடுமுறை அளிப்பதை சட்டபூர்வமாக மாற்றியுள்ளது. மருத்துவ ஆதாரமின்றி, மாதந்தோறும் ஒருநாள் விடுப்பு அனுமதிக்கப்படுகிறது.
தைவானில் பெண்கள், ஒவ்வொரு ஆண்டும் 3 நாட்கள் ஊதியத்துடன் விடுமுறைக்கு அனுமதிக்கப்படுவர். விடுமுறை நாட்களில் அரை நாள் ஊதியம் பெறலாம்.
வியட்நாமில் மாதவிடாய் சமயத்தில் பெண்கள், மாதத்திற்கு 3 நாட்கள் விடுமுறை எடுக்க சட்டம் அமலில் உள்ளது. ஒருவேளை பெண்கள், விடுமுறை எடுக்காவிட்டால், கூடுதல் சம்பளம் வழங்க வேண்டும்.
இந்தோனேஷியாவில் பெண்கள் மாதவிடாயின் முதல் 2 நாட்கள் விடுமுறை எடுக்க அனுமதிக்கும் சட்டம் அமலில் உள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மாதவிடாய் சமயத்தில் ஊதியத்துடன் விடுமுறை சட்டப்பூர்வமாக இல்லை. இருந்தபோதும், ஒருசில தனியார் நிறுவனங்களில் இது அமலில் உள்ளது.
இந்தியாவில் ஸ்விகி, ஸொமோட்டோ போன்ற நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும், 1 அல்லது 2 நாட்கள் ஊதியத்துடன் விடுமுறை எடுத்து கொள்ள பெண்களை அனுமதிக்கின்றனர்.
ஆஸ்திரேலியாவின் உள்ளாடை தயாரிப்பு நிறுவனமான மோடிபேடி, ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் ஊதியத்துடன் விடுமுறை எடுக்க அனுமதித்துள்ளது.