ஆயுள் குறைக்கும் கோபம்...!
அடிக்கடி கோபப்படுவது உங்கள் இதயத்தை பாதிக்கும். கோபப்பட்டதிலிருந்து 2 மணி நேரத்துக்கு மாரடைப்பு, நெஞ்சு வலி, இதய செயலிழப்பு அல்லது சீரற்ற இதயத்துடிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு சிறிது அதிகரிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
நீங்கள் அடிக்கடி கோவப்படுபவராக இருந்தால், அது உங்களுடன் உடல்நிலையை பாதிக்கிறது. ஒரு நிமிடக் கோபம் உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை 4 முதல் 5 மணி நேரத்துக்கு பலவீனப்படுத்துவதாக ஆய்வு தெரிவிக்கிறது.
அதிகம் கோபப்படும் போது, அது கோபப்படுபவரின் நுரையீரல்களையும் பாதிக்கிறது.மேலும் சுவாச பிரச்னைகள் வரும் வாய்ப்பை அதிகரிக்கிறது.
சரியாக கையாள முடியாத கோபத்தால் உடல் பல்வேறு வகைகளில் பாதிப்புக்கு உள்ளாகிறது. தலைவலி, அஜீரண பிரச்னைகள், அடிவயிற்று வலி, தூக்கமின்மை, கவலை, பதற்றம், உயர் ரத்த அழுத்தம், சரும பிரச்னைகள் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படலாம்.
கோபம் என்பது இயல்பான உணர்ச்சியின் வெளிப்பாடுதான். அதேநேரம் உங்களால் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், மனநிலை ஆலோசகர்களிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.
கோபத்தை எப்படி கையாள்வது, விளைவுகளை எப்படி எதிர்கொள்வது படிப்படியாக கோபத்தை கட்டுப்படுத்துவது என பல்வேறு யுத்திகளை அவர்கள் சொல்லித் தந்து கோபத்தை வெல்ல உதவுவர்.