வயிற்று உப்புசத்தை குறைக்கும் 5 உணவுகள்..!
வெள்ளரிக்காயில் 95 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. வெள்ளரிக்காய் எடுத்து
கொள்வதால், வயிறு உப்புசத்தை குறைப்பதோடு, நீர்ச்சத்து குறைப்பாட்டால்
ஏற்படும் அஜீரணத்தை குறைக்கிறது.
தயிரில் உள்ள புரோபயோட்டிக்ஸ் பெருங்குடலில் மலத்தின் நிலைத்தன்மையை இளக செய்வதால், தேவையற்ற வாயுக்கள் வயிற்றில் தங்குவதை தடுப்பதுடன், ஒழுங்குப்படுத்துகிறது.
கிரீன் டீயில் ஏராளமான ஆன்ட்டி ஆக்ஸிடெண்டுகள் உள்ளதால், வயிற்று வீக்கத்தை குறைப்பதோடு, வயிறை எளிதாக உணர வைக்கிறது.
இஞ்சி
வயிறு காலியாக இருப்பதை துரிதப்படுத்துகிறது. இதனால் வயிறு மிதப்பது அல்லது
எப்போதும் நிரம்பியது போன்ற உணர்வதை குறைக்கிறது.
ஓட்ஸில் பீட்டா குளுக்கான் நிறைந்துள்ளது. இது வயிற்று அழற்சிக்கு எதிரான நன்றாக செயல்படும் ஆற்றல் கொண்டது.