பயணத்தை எளிதாக்கும் அசத்தலான டிராவல் கேட்ஜெட்ஸ்..!

பயணத்தின் போது எடுத்துச் செல்லக்கூடிய மிகச் சிறிய ஸ்டீம் அயர்ன் பாக்ஸ். 420 வாட் மோட்டார், 3 அடுக்கு வெப்ப நிலைகள் கொண்ட இது ஒரு கம்ப்யூட்டர் மவுஸ் அளவுதான்.

நீண்ட பயணங்களுக்கு அதிக ஆடைகளை எடுத்துச் செல்வதை விட, பாக்கெட் சைஸ் வாஷிங் மெஷினை கையோடு எடுத்துச் செல்லலாம்.

ஃப்ளெக்சிபில் வடிவமைப்பு கொண்ட இதில் 2-4 லிட்டர் தண்ணீரை ஊற்றி கொஞ்சம் வாஷிங் லிக்விட் ஊற்றினால் போதும். 3 நிமிடத்தில் துணிகள் துவைக்கப்பட்டு பளபளப்பாக கிடைக்கும்.

தொலைதூர இடங்களுக்கு செல்லும்போது, குடிக்க தூய்மையான தண்ணீர் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. இதற்கு வாட்டர் பியூரிஃபையர் பாட்டில் வுதவியாக இருக்கும்.

மார்க்கெட்டில் தற்போது கிடைக்கும் இவ்வகை சன்கிளாஸ் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து உங்களின் கண்களை காப்பதுடன், உங்கள் இனிய பயண நினைவுகளை பதிவு செய்யவும் உதவுகிறது.

நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத வகையில் உங்கள் பயண அனுபவத்தை பதிவுச் செய்யும் ஆக்ஷன் கேமரா. ஹெல்மெட்டில், தோள்பட்டையில், பையில் என பல இடங்களில் இவற்றைப் பொருத்திக் கொள்ளலாம்.