கோடைக்கால சரும பராமரிப்பு: சணல் விதை எண்ணெய் சிறந்த தேர்வு

சணல் (விஜயா) தாவரத்தின் விதைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் குளிர் அழுத்தப்பட்ட எண்ணெய்(cold-pressed oil ) ஆகும்.

இயற்கையான மற்றும் நச்சுத்தன்மையற்றதாக இருப்பதால், சணல் எண்ணெய் மெதுவாகத் தோல் பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த தீர்வாகவுள்ளது.

சணல் விதை எண்ணெய் ஒரு சிறந்த மாய்ஸ்சரைசர் ஆகும். சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் மாற்ற உதவுகிறது.

சணல் விதை எண்ணெயில் காமா-லினோலெனிக் அமிலம் (ஜிஎல்ஏ) உள்ளதால், தோல் அழற்சி மற்றும் அரிப்பு போன்ற பல்வேறு தோல் நோய்களுக்கான சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது.

கோடை மாதங்களில் வியர்வை வெளியேறுவதால், சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியாகி, துளைகள் மற்றும் வெடிப்புகளுக்கு வழிவகுக்கும். இதை தடுக்க சணல் விதை எண்ணெய் ஒரு சிறந்த தேர்வாகும்.

சணல் விதை எண்ணெயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை புற ஊதா கதிர்வீச்சினால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவும்.

சணல் விதை எண்ணெயில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. இது தோல் சுருக்கங்களைக் குறைக்க உதவதோடு, சருமத்திற்கு இளமையான தோற்றத்தை அளிக்கிறது.