உயரமாக தெரியணுமா? இப்படி ட்ரஸை டிரை பண்ணுங்க…
உயரம் குறைந்த பெண்கள் பல பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள். இதில் முக்கியமான ஒன்று ஆடைகள் தேர்வு செய்வது.
சில வகை ஆடைகள், ஏற்கெனவே உயரம் குறைந்தவர்களாக இருக்கும் அவர்களை மேலும் குள்ளமானவராக தோன்ற செய்யும்.
சில ஆடை உத்திகளை பயன்படுத்துவதன் மூலம் குள்ளமாக இருப்பவரையும் உயரமாக தோன்ற செய்யலாம்.
அந்த வகையில் சற்றே உயரம் குறைந்த பெண்கள் அணிவதற்கு ஏற்ற ஒரு சில ட்ரெண்டி ஆடைகளை பற்றி பார்ப்போம்.
நீண்ட குர்த்தவுடன் கணுக்கால் வரை உயரமுள்ள பேன்ட் அணியும் போது, உங்கள் கால்கள் சற்றே நீளமாக தெரிவதால் இது உயரமாகவும் ஒல்லியாகவும் காட்டும்.
உயரம் குறைந்தவர்களை கருப்பு மற்றும் அடர்நிற புடவைகள், சுடிதார்கள் உயரமானவர்களாக காட்டும்.
பலாஸோ பேன்ட் உடன் லாங் டாப்புகள் அணிவது உயரமாக காட்டும்.
ஜீன்ஸில், ஹை வெய்ஸ்ட் ஜீன்ஸ்கள் குட்டையான பெண்களை உயரமாக காட்டும்.
சற்று பருமனானவர்கள் ஃப்ரீ சைஸ் டீசர்ட்டுகளை இதனுடன் அணியலாம்.
குள்ளமான பெண்களுக்கு பொதுவாகவே புடவைகள் பொருத்தமாக இருக்காது.
புடவைகளை தேர்வு செய்கையில், மெலிதான புடவைகளை தேர்வு செய்ய வேண்டும். இந்தப் புடவைகள் உங்களை உயரமாகவும் அழகாகவும் தரும்.