தற்கொலையை தவிர்ப்பது எப்படி..?

வாழ்க்கையின் மீது எந்தவொரு பிடிப்பும் இல்லாமல், விரக்தியாக பேசும் நபர்களிடம் அவர்களுக்கு ஆறுதலாக பேசலாம்.

தற்கொலையை பற்றி பேசும் நபர்களின் பேச்சை அலட்சியப்படுத்தாமல், நான் உன்னோடு இருக்கிறேன். என்ன நடந்தாலும் இருப்பேன் என நம்பிக்கை அளிக்கலாம்.

அவர்களை மனம் விட்டு பேச செய்து, அவர்களின் மனவலியை குறைக்க முயற்சிக்கலாம்.

தற்கொலை எண்ணத்துடன் இருக்கும்பட்சத்தில், அவரை தனியாக விடாமல், உடனடியாக மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்வது நல்லது.

அவர்களிடம் கவனமாக பேசுங்கள், மேலும் காயப்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது.

மாணவர்களின் பொதுவான உணர்ச்சி சிக்கல்கள், குடும்பநிலை குறித்து பேசுவதும் அதில் இருந்து சிந்தனையை படிப்பின் பக்கம் திருப்ப ஆசிரியர்கள் முயற்சிக்கலாம்.

தேர்வுகளுக்கு தயாராவது மட்டுமல்லாமல், தோல்வியை எதிர்கொள்வது மட்டுமின்றி ஏற்றுக்கொள்வது எப்படி என்பது குறித்து பேசலாம்.