மெட்டபாலிசம் அதிகரிக்க தவிர்க்க வேண்டிய 6 பழக்கங்கள்..!

அலுவலகத்தில் எப்போதும் அமர்ந்தப்படி வேலை செய்வது சோம்பலை ஏற்படுத்துவதுடன், செயலற்றவராக மாற்றி விட கூடும். இது உங்கள் மெட்டோபாலிசம் எனப்படும் வளர்சிதை மாற்றத்தை தாமதப்படுத்தும்.

அதிகளவில் மன அழுத்தத்தை தலையில் ஏற்றி கொள்வது, 'விடாதே, சண்டையிட்டு கொண்டே இரு' என உடலை அழுத்தும். இது தற்காலிகமாக உடல் உறுப்புகளின் செயல்பாட்டை நிறுத்தலாம். மேலும் வளர்சிதை மாற்றத்தை தாமதப்படுத்தும்.

உடல் எடையை குறைக்கிறேன் என்ற பெயரில் பட்டினி கிடப்பது, உணவு எடுத்து கொள்வதை குறைப்பது, மெட்டபாலிச விகிதத்தை குறைக்கும்.

அதிக உடற்பயிற்சி செய்வது உங்கள் உடலை கேட்டபோலிக் நிலைக்கு கொண்டு செல்லும். இதனால் உடலின் தசைப்பகுதி குறையும். தசைப்பகுதி குறைவது வலிமை குறையும். இதனால் உடலின் வளர்சிதை மாற்றத்தை குறைக்கும்.

தூக்கமின்மை இருப்பின், வளர்சிதை மாற்றத்திற்கு, உடலில் சுரக்க வேண்டிய ஹார்மோன்கள் சுரப்பில் மாற்றத்தை ஏற்படுத்தும்.எனவே குறைந்தது 8 மணி நேர தூக்கம் அவசியம்.

கட்டுப்பாடான உணவு முறை பின்பற்றுவது 95 சதவீதம் எடை குறைப்பு தோல்வியடைய காரணமாக விளங்குகிறது. எடை குறைப்பை தொடர்ந்து விரைவில் உடல் எடை கூடி விடும்.