தாதுச்சத்துகளின் களஞ்சியம் காலா நமக் அரிசி..

காலா என்றால் கருப்பு என்று பொருள். நமக் என்றால் உப்பு என்று பொருள். கருப்பு நிற நெல்லைக் கொண்ட வெள்ளை நிற அரிசி வகையாகும்.

நெல் விதைத்த தேதியிலிருந்து 120 நாட்களில் அறுவடைக்கு வரும்.

காலா நமக் அரிசியில் அதிகளவு இரும்புச் சத்து, ஜிங்க் சத்து நிறைந்துள்ளதால், இந்த சத்து குறைபாட்டினால் வரும் நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது.

புரதச் சத்துக்கள் அதிகம் உள்ளதால், கல்லீரலை பலப்படுத்தும்.நார்ச்சத்து நிறைந்திருப்பதால், உடலில் உள்ள கழிவுகளை எளிதாக வெளியேற்றும்.

நீரிழிவு நோய் கொண்டவர்கள் இந்த அரிசியில் உணவு சமைத்து சாப்பிட்டு வந்தால் குணமாகும். வைட்டமின் குறைபாடுகளை போக்கும்.

மூளை நரம்புகளை பலப்படுத்துவதோடு, சிறுநீரகம் சார்ந்த பிரச்சனைகளை நீக்க உதவும். புற்றுநோய் செல்களை அழித்து நோய் வராமல் தடுக்கும்.

ரத்த அழுத்தத்தை குணப்படுத்தும். முதுமையிலும் இளமையாக இருக்க துணை நிற்கும் சிறந்த அரிசியாகும்.