புரதம் நிறைந்த உணவுகள்!ஆரோக்கியமான உடலுக்கு தேவையான சத்துக்களில் புரோட்டீன் எனும் புரதச்சத்து மிகவும் இன்றியமையாதது.

தயிர் ... இதில் அதிகளவு புரதம் உள்ளது. மேலும் தயிரில் கால்சியம், வைட்டமின் B2, வைட்டமின் B12, பொட்டாசியம், போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளது.

பீன்ஸ்... அனைத்து பீன்ஸ் வகைகளிலும் புரதம் அதிகம் உள்ளது. உங்களுக்கு பிடித்தவகையில் தயார்செய்து பீன்ஸை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

பருப்பு வகைகள்... உலகில் கிடைக்கும் ஆரோக்கியமான உணவுகளில் பருப்பும் ஒன்று. தினமும் ஒரு வகை பருப்பை எடுத்துகொள்ளலாம்.

ஆடு, கோழி இறைச்சி :உணவுகளில் அதிக அளவில் புரதம் நிறைந்திருப்பது இறைச்சிகளில் தான். இதில் உடலுக்கு தேவையான அயோடின், வைட்டமின்B6, இரும்புசத்து உள்ளது.

மீன்:மீன்கள் புரதத்தின் மற்றொரு சத்தான மூலமாகும். மீனில் கால்சியம், இரும்புசத்து, பொட்டாசியம், வைட்டமின் B2, வைட்டமின் D உள்ளன.

முட்டை:முட்டை சுவையாகவும் சத்தானதாகவும் இருக்கும். வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்தது.

பால் :புரதம் தேவையானவர்கள் தினமும் ஒரு கிளாஸ் பால் பருகலாம். பொட்டாசியம், பி 12, கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவை உள்ளன.