மூக்கின் மேல் கரும்புள்ளியா?- கையிலேயே இருக்கு தீர்வு..!

உருளைக்கிழங்கை வட்டவடிவில் நறுக்கி அதை மூக்கின் மேல் பகுதியில் சிறிது நேரம் மஜாஜ் செய்தால் கரும்புள்ளி மற்றும் சொரசொரப்பு தன்மை மறையும்.

தேனை லேசாகச் சூடு செய்து அதனுடன் வெள்ளைச் சர்க்கரையைக் கலந்து மூக்கின் மேல் பகுதியில் சிறிது நேரம் மஜாஜ் செய்து, தண்ணீரால் கழுவினால் கரும்புள்ளி மற்றும் சொரசொரப்பு தன்மை நீங்கும்.

இலவங்கப்பட்டை பொடியுடன் தேன் கலந்து மூக்கின் மேல் பகுதியில் தடவி சிறிது நேரம் கழித்துக் கழுவினால் கரும்புள்ளிகள் மறையும்.

தக்காளியை கூழாா அரைத்து கரும்புள்ளி உள்ள இடத்தில் தடவி பின்னர் தண்ணீரைக் கொண்டு கழுவினால் எண்ணெய் பசை நீங்குவதோடு கரும்புள்ளியும் மறையும்.

கடலை மாவுடன் பாதாம் பருப்பைப் பொடி செய்து சேர்த்து பசையாக மாற்றி முகத்தில் தடவி சிறிது நேரம் உலர்ந்த பிறகு தண்ணீர் கொண்டு கழுவினால் கரும்புள்ளிகள் முற்றிலுமாக மறையும்.

கருப்பு காராமணியைத் தண்ணீர் சேர்த்து பசை போல் அரைத்து, அதை மூக்கின் மேல் பகுதியில் தடவி, பின்னர் தண்ணீரால் கழுவினால் கரும்புள்ளி மறையும்.