பனையின் வரப்பிரசாதம்- பனங்கற்கண்டின் பயன்கள்..!
பனங்கற்கண்டில் இரும்புச்சத்து, பொட்டாசியம், ஜிங்க், வைட்டமின் பி1,பி2, பி3 உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.
வயிற்றுப்புண், மார்புச்சளி
உள்ளிட்ட பிரச்னைகளால் அவதிப்படுபவர்கள், கொத்தமல்லி கஷாயத்தில்
பனங்கற்கண்டை சேர்த்து சாப்பிட்டால் நிவாரணம் பெறலாம்.
நீண்ட நாள் சளி தொந்தரவு, நுரையீரல் தொடர்பான பாதிப்பு உள்ளவர்கள்
திரிகடுகு கஷாயத்தில் பனங்கற்கண்டை சேர்த்துச் சாப்பிட்டால் தொந்தரவு
நீங்கும்.
கருவுற்ற பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஏற்படும் மலச்சிக்கலை பனங்கற்கண்டு சரிசெய்கிறது.
பனங்கற்கண்டில் நிறைந்துள்ள கால்சியம் ஈறுகளில் ஏற்படும் ரத்தக் கசிவை தடுத்து பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
ஞாபகசக்தியை அதிகரிக்க பனங்கற்கண்டுடன், பாதாம் பருப்பு, சீரகம் சேர்த்து
இரவில் உறங்குவதற்கு முன்பு சாப்பிட்டு வந்தால் நல்ல பலனை தரும்.
பசும்பாலுடன் பனங்கற்கண்டு மற்றும் சிறிது ஏலக்காய் கலந்து தினமும் இருவேளை குடித்து வந்தால், நல்ல உறக்கத்தையும் அளிக்கும்.