கோடையை குளுமையாக்கும் ஸ்ட்ராபெர்ரி குச்சி ஐஸ்..வீட்டிலேயே செய்யலாம்!

2 கப் ஸ்ட்ராபெர்ரி பழங்களை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

அதில் இருந்து 5 அல்லது 6 துண்டுகளை தனியாக எடுத்து வைக்கவும்.

மீதம் இருக்கும் ஸ்ட்ராபெர்ரி துண்டுகளுடன் ¾ கப் சர்க்கரை மற்றும் ½ கப் தண்ணீர் சேர்த்து மிக்சியில் நன்றாக அரைக்கவும்.

குச்சி ஐஸ் அச்சில், தனியாக எடுத்து வைத்திருக்கும் ஸ்ட்ராபெர்ரி துண்டுகளை போடவும்.

பின்னர், அரைத்த கலவையை அதன் மேலே ஊற்றி நிரப்பவும். இதை 3 மணி நேரம் பிரீசரில் வைக்கவும்.

பிறகு அச்சில் இருந்து எடுத்தால் 'ஸ்ட்ராபெர்ரி குச்சி ஐஸ் ' தயார்.