யோகாசனம் செய்ய பயிற்சி அவசியமா?

தனி நபரின் தேவை, பிரச்னைகளுக்கு ஏற்ற வகையில் என்ன மாதிரியான யோகாசனங்களை செய்ய வேண்டும் என்று மருத்துவ ஆலோசனை பெற்றே பயிற்சிகளை செய்ய வேண்டும்

அப்படி செய்யும் போது பக்க விளைவுகள் இருக்காது; உடல் வலிமையடையும். நோயின் தன்மையின் அடிப்படையில் ஆசனங்கள் மாறுபடும்.

பொதுவாக உயர் ரத்த அழுத்தம், துாக்கமின்மை போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள், ஒரே மாதிரியான யோகா பயிற்சிகளை செய்ய முடியாது.

குழந்தைகள் அவர்களுக்கான யோகா பயிற்சி செய்வதால் கண் பார்வை மேம்படும்; நினைவுத் திறன் அதிகரிக்கும். உடல் பருமன் இல்லாமல், வயதிற்கு ஏற்ப சீரான உடல் எடை இருக்கும்.

அதேபோல் டீன்- ஏஜ் குழந்தைகள் தினமும் யோகா பயிற்சி செய்வதால், 'பிசிஓடி' எனப்படும் நீர்க்கட்டிகள், உடல் பருமனால் ஏற்படும் பிரச்னைகள் இவற்றில் இருந்து விடுபடலாம்.

நம் சுவாசத்தை நாமே கவனிப்பதன் மூலம் மனதை கட்டுப்படுத்தவும், அமைதிப்படுத்தவும் முடியும்.

இதன் தொடர்ச்சியாக மகிழ்ச்சி உணர்வை தரும் ஹார்மோன்களான ஆக்ஸ்சிடோசின், டோபமைன், செரடோனின் அதிக அளவில் சுரக்கும்.