கேன்ஸ் 2023: அசத்திய ஊர்வசி ரவுட்டேலா
உலகப்புகழ் பெற்ற 76வது கேன்ஸ் திரைப்பட விழா பிரான்சில் நடக்கிறது. முதல் நாள் துவக்க விழாவில் ஊர்வசி ரவுட்டேலா உட்பட பலர் பங்கேற்று சிவப்பு கம்பளத்தில் ஸ்டைலாக நடை போட்டனர்.
கேன்ஸ் விழாவில் இரண்டாவது முறையாக மயக்கும் பாப் பிங்க் நிற கவுன் அணிந்து ஸ்டைலிஷாக சிவப்பு கம்பளத்தின் மீது நடைப்போட்டார் ஊர்வசி ரவுட்டேலா.
இதற்கு மேட்சிங் ஆக ஊர்வசி அணிந்திருந்த நெக்லஸ், இரு முதலைகள் ஒன்றோடு ஒன்று இணைந்தாற்போன்று வடிவமைக்கப்பட்டிருந்தது.
அதே டிசைனில் வடிவமைக்கப்பட்ட முதலை உருவ வளைத் தோடுகள், உச்சந்தலையில் தூக்கி இடப்பட்டிருந்த கொண்டை, டார்க் பிங்க் நிற லிப்ஸ்டிக் என ஜொலித்தார் ஊர்வசி ரவுட்டேலா.
முதலைகளின் மீது பளபளக்கும் வைரங்களும், நுணுக்கமான வடிவமைப்பும் பார்வையாளர்களை வெகுவாக அசர வைத்தது.
ஊர்வசியின் ரவுட்டேலாவின் இந்த பிங்க் நிற ஸ்டைலிஷான புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.