கேன்ஸில் சில்வர் கேப் கவுனில் ஜொலித்த ஐஸ்வர்யா ராய் பச்சன்

பிரான்ஸில் 76வது கேன்ஸ் திரைப்பட விழா நடக்கிறது.

பல ஆண்டுகளாக சிவப்புக் கம்பளத்தில் அசத்தி வரும் ஐஸ்வர்யா ராய் பச்சன் வழக்கம் போல் நேற்றும், அழகிய பேஷன் உடையில் உற்சாக நடை போட்டார்.

'இண்டியானா ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆஃப் டெஸ்டினி' படம் திரையிடப்பட்ட போது, அழகிய பேஷன் உடையில் சிவப்பு கம்பளத்தில் நடை போட்டு அசத்தினார் ஐஸ்வர்யா ராய்.

தலை மீது போர்த்தியது போன்று ஸ்டிப்பான தகதகக்கும் வெள்ளி கேப் கொண்ட ஃபுல் கவுனை அணிந்திருந்தார் அவர். இடுப்பில் பட்டர்ஃபிளை போன்று கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

சோஃபி கவுச்சர் சார்பில் கிரிஸ்டல், லைட் வெயிட் அலுமினியம் போன்றவற்றின் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் இந்த டிராமடிக் கேப் சில்வர் கவுன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

படிய வாரிய நிலையில் விரித்த கூந்தல், ப்ளஸ் மற்றும் ஸ்மோக்கி ஐலைனர், டார்க் சிவப்பு நிற லிப்ஸ்டிக் என மினிமல் மேக்கப்பில் ஜொலித்தார் ஐஸ்வர்யா ராய் பச்சன்.

கேன்ஸ் சிவப்புக் கம்பளத்தில் இவரின் இந்த முதல் ரேம்ப் தோற்றம் பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது.

முன்னதாக, கேன்ஸில் நடந்த லோரியல் நிகழ்ச்சியில் பளபளக்கும் பச்சை நிற கஃப்தான் உடையில் ஜொலித்தார் ஐஸ்வர்யா ராய் பச்சன்.

ஹை ஹீல்ஸ் உடன் விரித்த கூந்தல், நேர்த்தியான ஐலைனர், மெரூன் நிற லிப்ஸ்டிக் என மினிமல் மேக்கப்பில் உற்சாக நடை போட்டார்.

கேன்ஸில் அசத்தும் ஐஸ்வர்யா ராயின் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.