தாய்ப்பால் கொடுப்பதை எப்போது, எவ்வாறு நிறுத்தலாம்?

பிறந்த குழந்தைக்கு முதல் 6 மாதங்கள் தாய்ப்பால் மட்டுமே வழங்க வேண்டும். மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை தாய்ப்பால் புகட்ட வேண்டும்.

பின்னர், இணை உணவுகளுடன் தாய்ப்பாலை இரண்டு வயது வரை வழங்கலாம்.

அதேவேளையில், 2 வயது ஆனவுடன் தாய்ப்பாலை உடனே நிறுத்த வேண்டுமென எந்த கட்டாயமும் இல்லை.

தாய்ப்பால் சுரக்கும் வரை வழங்கலாம். இரவில் மட்டுமாவது கொடுக்கலாம்.

அப்படி 2 வயதுக்கு மேல் வேறு சில காரணங்களுக்காக நிறுத்த நினைத்தால் காம்பில் விளக்கெண்ணெய் தடவலாம்.

அச்சுவை பிடிக்காமல் பால் குடியை குழந்தை மறக்கும் என்பது டாக்டர்களின் அட்வைஸாகும்.

குழந்தை குடிக்க துவங்கும்போது முதலில் வரக்கூடிய முன் பாலில் நீர்ச்சத்துக்கள் தான் இருக்கும். பின் பாலில் உள்ள லிப்பிடுகள், ஊட்டச்சத்துக்கள் தான் பசியை ஆற்றி தேவையான போஷாக்கைத் தரும்.