அன்னாசி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 7 நன்மைகள்

அன்னாசி பழத்தில் 85 சதவீதம் நீர்ச்சத்துடன், அதிக நார்ச்சத்து உள்ளது. குடல் ஆரோக்கியத்துக்கு உதவும் புரோமெலைன் என்ற என்சைம் நிறைந்துள்ளது.

புரோமெலைனில் உள்ள அழற்சி எதிர்ப்பு தன்மை, உடலில் காயத்தால் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும் ஆற்றல் கொண்டது.

புரோமெலைனில் வலிக்கு எதிராக செயல்படும் ஆற்றல் இருப்பதால், மூட்டுவலியால் பாதிக்கப்பட்டோர் பைனாப்பிளை அடிக்கடி எடுத்து கொள்ளலாம்.

இதிலுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், குறிப்பாக பினோலிக்ஸ், ஃபிளாவனாய்டு மற்றும் வைட்டமின்- சி சத்துக்கள் அதிகமிருப்பதால், புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்க உதவுகிறது.

உடல் எடையை குறைக்க, தொப்பையை கரைக்க முயற்சி செய்வோர் அன்னாசி பழத்தை எடுத்து கொண்டால் மாற்றத்தை காணலாம்.

எலும்புகள் வலிமையாக இருக்க கால்சியத்துடன், மாங்கனீசு அவசியம். இவை இரண்டும் அன்னாசி பழத்தில் நிறைந்துள்ளது.

இதிலுள்ள வைட்டமின், தாது பொருட்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.