நைட் ஷிப்ட் பார்ப்பவர்கள் உடல் ஆரோக்கியத்துக்கு 10 குறிப்புகள்!

இரவுப் பணி முடிந்த பின்னர் மற்ற வேலைகளுக்கான அட்டவணையை நேர மேலாண்மை உத்தி மூலம் உருவாக்குங்கள்.

இரவு வேலைப் பற்றி குடும்ப உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்துங்கள். தொந்தரவின்றி 7 மணி நேரமாவது உறங்க வேண்டியதன் அவசியத்தை அவர்கள் உணர வேண்டும்.

வீட்டு உறுப்பினர்கள் அதிகம் வந்து செல்லாத அறையாக தேர்ந்தெடுத்து, அங்கே உறங்குவதை வாடிக்கையாக்கி கொள்ளுங்கள்.

நாள்பட்ட தூக்கமின்மை உடல்நலம், உற்பத்தித்திறன் ஆகியவற்றில் தாக்கங்களை ஏற்படுத்தும். 7 மணி நேர தூக்கம் அவசியமாகும்.

பகல் நேரத்தில் படுக்கைக்குச் செல்வதற்கு கேஃபின் பானங்களை தவிருங்கள். வெதுவெதுப்பான பால் அல்லது தண்ணீர் பருகுங்கள்.

ஷிப்ட் வேலை வளர்சிதை மாற்ற பிரச்சனைகள் அதிகரிக்கும். எனவே ஆரோக்கிய உணவுகள் உங்கள் தட்டில் இருப்பது முக்கியம்.

நமது உடலுக்கு பெண்கள் என்றால் தினசரி 2.6 லிட்டர், ஆண்கள் என்றால் 3.7 லிட்டர் தண்ணீர் பருக வேண்டியது அவசியம்.

இரவு ஷிப்டில் பணிபுரிவது இதய நோய் மற்றும் பிற பிரச்னைகளுக்கான ஆபத்தை அதிகரிக்கக்கூடும். எனவே சீரான உடற்பயிற்சியை பின்பற்றுவது முக்கியம்.