மூங்கில் பூவில் இருக்கும் விதைகளே மூங்கில் அரிசி என அழைக்கப்படுகிறது.
உடல் மெலிந்தவர்கள், மூங்கில் அரிசியைச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால், உடல் வலுவாகும்.
இதில், கஞ்சி வைத்துக் குடித்து வந்தால் மூட்டு வலி, மூட்டில் நீர் கோர்த்துப் போதல், இடுப்பு வலி மற்றும் நாள்பட்ட முதுகு வலி உட்பட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
நீரிழிவு பாதிப்புக்கு உள்ளானவர்கள் மூங்கில் அரிசியைச் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம்; மெலிந்த உடலும் தேறும்.
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுவதை தவிர்க்க, மூங்கில் அரிசியை பயன்படுத்தி பிடித்தமான உணவுகளைச் செய்து சாப்பிடலாம்.