அதிகரிக்கும் மாரடைப்பு… லோடிங் டோஸ் உதவுமா?
மாரடைப்புக்கு முதல் உதவி செய்யும் மாத்திரைகள், லோடிங் டோஸ் எனப்படும்.
மாரடைப்பில் இருந்து தப்பிக்க, சட்டைப்பையில் 'லோடிங் டோஸ்' எனும் மாத்திரைகளை எப்போதும் வைத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இதில், டிஸ்பிரின், 350 மி.கி., 1, அடார்வாஸ்டாடின், 80 மி.கி.,1, குலோபிடாப், 150 மி.கி., இருக்கும்.
மாரடைப்பு வரும்போது நோயாளிகளுக்கு வலியைக் குறைக்க கொடுக்கப்படும் உயிர் காக்கும் மருந்துகள் அதில் இருக்கும். இது குறித்து மருத்துவரின் ஆலோசனை பெற்று கொள்ளலாம்.
இந்த மாத்திரைகளை ஒரு கவரில் போட்டு, எப்போதும் நம்முடைய மேல்சட்டைப்பையில் வைத்திருக்க வேண்டும்.
மாரடைப்பு ஏற்படும் சூழல் ஏற்படும் போது, உரிய மருத்துவரை பார்க்க ஒரு சில மணி நேரங்கள் ஆகலாம்.
அப்போது, இம்மருந்துகளை நாம் உட்கொள்வதால், நம் ரத்தத்தின் அடர்த்தியை குறைத்து, மாரடைப்பில் இருந்து காப்பாற்ற வாய்ப்பு ஏற்படும்.
இன்றைய காலகட்டத்தில் வீடுகளில் லோடிங் டோஸ் (loading dose) வைத்திருக்கலாம்.
குறிப்பாக சுகர், பிபி, புகை, மது பழக்கம், 40 வயதுக்கு மேற்பட்டோர், 80 கிலோவுக்கு மேற்பட்டவர்கள், கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் இவற்றை வைத்து கொள்ளலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.