நெல்லிக்காய் முதல் வால்நட் வரை: மாதவிடாய்க்கு மருந்தாகும் அற்புத உணவுகள்..!

நெல்லிக்காயில் சிட்ரிக் அமிலம் அதிகம் உள்ளதால் ஆரோக்கிய நலன்களுக்காக ஆயுர்வேதத்தால் பரிந்துரைக்கப்படுகிறது. இது ரத்த சர்க்கரை அளவு, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது மற்றும் நச்சு திரட்சியைத் தடுக்கிறது.

வாழைப்பழத்தில் வைட்டமின் பி6 நிறைந்துள்ளது. இது மனநிலை மாற்றங்களைத் தடுக்கவும், மாதவிடாயின் போது சிலருக்கு ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவும்.

பேரீச்சம் பழத்தில் அதிகளவிலான இரும்புச்சத்து உள்ளது. இது மாதவிடாயின் போது ஏற்படும் இரும்புச் சத்து இழப்பைத் தடுக்க உதவியாக இருக்கும்.

வால்நட்ஸில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது. மாதவிடாயின் போது ஏற்படும் பிடிப்புகள் மற்றும் அசௌகரியத்தை குறைக்க உதவும்.

இஞ்சி அழற்சி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணி பண்புகளைக் கொண்டுள்ளது. இது மாதவிடாய் பிடிப்பை எளிதாக்க உதவும். சில பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் குமட்டலைப் போக்க உதவுகிறது.

சீமை சாமந்திப்பூ, புதினா அல்லது ராஸ்பெர்ரி இலை போன்ற மூலிகைகளை கலந்து தேநீர் தயாரித்து பருகும் போது, கருப்பை மற்றும் ஒட்டுமொத்த இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.