75ம் ஆண்டு சுதந்திர தினம்.. தெறிக்க விட்ட பிரபலங்கள்...!

நாடு முழுவதும் இன்று 75ம் ஆண்டு சுதந்திரதினத்தை முன்னிட்டு பலரும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். முதல்வர் ஸ்டாலின் உட்பட அந்தந்த மாநில முதல்வர்கள் தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தியுள்ளனர்.

பிரபலங்கள் முதல் பலரும் தங்களின் வீடுகளில் ஆர்வமுடன் கொடியேற்றி உற்சாகத்தை வெளிப்படுத்தி உள்ளனர். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தன் வீட்டில் ஏற்றப்பட்ட மூவர்ணக்கொடியுடன்...

சின்னத்திரை நடிகை சரண்யா துராடி மெரினா பீச்சில், தள்ளுவண்டி விற்பனையாளர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பலருக்கும் தேசியக்கொடியை வழங்கினார்.

நடிகர் சூரி, தேசியக்கொடியுடன் நிற்கும் புகைப்படத்தை பதிவிட்டு 'வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பாரத மணித்திருநாடு!' எனக் குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லியும் அவரின் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா.

தேசியக்கொடியை கையில் ஏந்தியபடி நடிகை ரகுல் பிரீத் சிங்

நடிகர்கள் சிரஞ்சீவி, மோகன்லால், துல்கர் சல்மான், அக்ஷய்குமார், அனில்கபூர், நடிகைகள் கீர்த்திசுரேஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, பாடகி மஹதி, ஸ்ரேயா கோஷல் உட்பட பலரும் தேசியக்கொடியுடன் தங்களின் புகைப்படத்தை பதிவிட்டு தேசப்பற்றுடன் கூடிய மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.