ஹேர் டை பிரச்னையை தவிர்க்க சில டிப்ஸ்...
ஹேர் டை போட்ட முதல் நாளே அலர்ஜி தென்பட்டால் அதை உபயோகிப்பதை உடனடியாக நிறுத்துங்கள்.
சில நாட்கள் கழித்து பக்க விளைவுகள் தென்பட்டால் உடனடியாக, பயன்படுத்திய கூந்தல் டை பாக்கெட்டுடன் மருத்துவரை கலந்துரையாடுவது அவசியம்.
பெண்கள் கர்ப்ப காலத்திலும், தாய்ப்பால் புகட்டும் காலத்திலும் டை அடிப்பதை தவிர்க்கவும்.
தற்போது கெமிக்கல் கலப்பில்லாத இயற்கையான ஹேர் டை பிராண்டுகள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன.
உங்கள் சருமதிற்கு இயற்கை முறையிலான டை வகைகளை பயன்படுத்தி நோய்களிலிருந்து பாதுகாத்து கொள்வது நல்லது.
மருத்துவரின் ஆலோசனையுடன் கூந்தலுக்கு ஏற்ற டையை வாங்கிப் பயன்படுத்துங்கள்.
குறிப்பாக பிபிடி ஃப்ரீ மற்றும் அமோனியா ஃப்ரீ எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் டையை உபயோகிக்கவும்.