நம்மிடமே இருக்கு மருந்து! - வேர்க்கடலை!
வேர்க்கடலையில், போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால், இனப்பெருக்கம் விரைவாக நடைபெறும்
வேர்க்கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்ப்பப்பை சீராக செயல்படுவதுடன், குழந்தைப் பேறும் உண்டாகும்.
பெண்களுக்கு மார்பக கட்டி உண்டாவதையும், நீரழிவு நோயையும் தடுக்கிறது.
வேர்க்கடலையில் உள்ள வைட்டமின்3, நியாசின், மூளை வளர்ச்சிக்கும், ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது
வேர்க்கடைலையை, 30 கிராம் தினமும் சாப்பிட்டு வந்தால், பித்தப்பை கல் உருவாவதை தடுக்க முடியும் என ஆய்வில், இது தெரிய வந்துள்ளது.
வேர்க்கடலையில், 'ரெஸ்வரெட்ரால்' என்ற சத்தும் நிறைந்துள்ளது. இது, இதய வால்வுகளை பாதுகாக்கிறது.
வேர்க்கடலையில் உள்ள ஒமேகா 3 சத்தானது, நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
100 கிராம் வேர்க்கடலையில், மோனோ அன்சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு - 24 கிராம், பாலி அன்சாச்சுரேட்டேட் - 16 கிராம் உள்ளது.