குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் தயிர் சாதம்..!
தயிர் சாதத்தை தினமும் சாப்பிடுவதால், உடலில் நோயை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராட உதவுதோடு, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
தயிர் சாதத்தில் கறிவேப்பிலை சேர்க்கப்படுவதால் அதில் உள்ள வைட்டமின்-ஏ கண்களை பாதுகாக்கிறது. இதில், கார்னியாவை பாதுகாக்கும் கரோட்டினாய்டுகள் அதிகம் உள்ளன.
தயிரில் சருமத்திற்கு ஈரப்பதம் அளிக்கும் மூலக்கூறுகள் அதிகம் உள்ளன. சருமத்தை வறட்சியில் இருந்து தடுத்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
கறிவேப்பிலையை தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் போது, ரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவும்.
தயிர் மன அழுத்ததை குறைக்கும் பண்புகளை கொண்டுள்ளது. தயிரில் உள்ள புரோபயாடிக் பாக்டீரியா மற்றும் நல்ல கொழுப்புகள் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
தயிரில் உள்ள சிறப்பு புரதங்கள், ஊட்டச்சத்து, மெக்னிசீயம், பொட்டாசியம் ஆகியவை ரத்த அழுத்ததை கட்டுப்படுத்துவதோடு, இதய ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.