மூளையை இளமையாக வைத்திருக்கும் உணவுகள்!
அவகேடோ பழங்களில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள், மூளையின் செயல்பாடு மற்றும் நினைவாற்றலை ஆதரிக்கும் ஊட்டச்சத்துகள் அதிகம் உள்ளது.
வால்நட்ஸில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் , ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள்,நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் அதிகம் உள்ளது. இது மூளையை ஆரோக்கியத்தை காப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கீரைகளில் ஃபோலேட் அல்லது வைட்டமின் பி9 அதிகம் உள்ளது. மூளை ஆரோக்கியமாக இருக்க தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
ஆளி விதைகளில் ஒமேகா-3, நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இவை மூளை மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு பயனளிக்கின்றன.
உயர்தர டார்க் சாக்லேட்டில் நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை ஆதரிக்கும் ஃபிளாவனாய்டுகள் உள்ளன. இவை மூளை செயல் திறன், ஞாபக சக்தி, ஆற்றல் அதிகரிக்கும்.
நல்ல தூக்கம், ஆரோக்கியமான மனநிலை உள்ளிட்டவற்றை கடைப்பிடித்தாலும் மூளை ஆரோக்கியமாக இருக்கும்.