பெண்களை அதிகம் பாதிக்கும் ஆர்த்ரைடீஸ்!
எலும்புகளை இணைக்க தசை நார்களும், இணைப்பு நார்களும் மூட்டுக்களில் உள்ளன. இவையனைத்தையும் உள்ளடக்கி ஒரு சவ்வு பை மூட்டுக்களை பாதுகாக்கும்.
மூட்டினுள்ளே எலும்புகள் இலகுவாக இயங்க ஸைனோவியம் என்ற மெல்லிய படலமும், சிறிது மூட்டு திரவமும் இருக்கும். மூட்டுக்களில் ஏற்படும் வலி, வீக்கம் அழற்சி ஆர்த்ரைடீஸ் எனப்படும்.
ஆண், பெண் இருவருக்கும் மூட்டு வாத நோய்கள் பாதிப்பு ஏற்பட்டாலும், ருமட்டாய்டு ஆர்த்ரைடீஸ், 20 - 40 வயதுடைய பெண்களையே அதிகம் பாதிக்கும்.
சுய எதிர்ப்பு தவிர, பருமன், மூட்டுக்கள் தேய்வது, அதிக எடை சுமப்பது, மூட்டுக்களில் ஏற்படும் காசநோய், மூட்டுக்களில் அதிக அளவு யூரிக் அமிலம் சேருவது, வைரஸ் தொற்றினாலும் வரலாம்.
சுய எதிர்ப்பு நோய் காரணமாக வரும் ஆர்த்ரைடீசை கட்டுக்குள் வைக்கலாம் குணப்படுத்த முடியாது. நோயை உறுதி செய்ய ருமட்டாய்டு ரத்த பரிசோதனை உள்ளன.
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை டாக்டரின் ஆலோசனையின் படி, தேவைப்படும் பரிசோதனைகளை செய்து, மாத்திரைகளை கூட்டியோ குறைத்தோ தர வேண்டியிருக்கும்.
மூட்டு வலியை குறைத்து தசைகளைப் பலப்படுத்த பிசியோதெரபி உதவும்.