கிருமிகளை அழிக்கும் சுண்டைக்காய்… பயன்கள் குறித்து அறிவோமா…
உடலிலுள்ள கிருமிகளை அழித்து, நச்சுக்களை வெளியேற்றுகிறது, சுண்டைக்காய். மேலும் இதில் வைட்டமின் ஏ, சி, இ ஆகிய சத்துக்களும் நிறைந்துள்ளன.
100 கிராம் சுண்டைக்காயில், இரும்பு சத்து - 22.5 மி.கி., கால்சியம் - 390 மி.கி., பாஸ்பரஸ் - 180 மி.கி., அடங்கியுள்ளது.
பச்சை சுண்டைக்காயை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால், எலும்புகள் பலப்படும்; பெண்களுக்கு நல்லது.
சிறுநீரை பெருக்கும் தன்மை கொண்டது, சுண்டைக்காய். கல்லீரல், மண்ணீரல் நோய்களையும் நீக்க உதவுகிறது.
இதில் உள்ள கசப்புத் தன்மை ரத்தத்தை சுத்தம் செய்வதோடு, ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது. ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதையும் தடுக்கிறது.
சர்க்கரை நோயாளிகளுக்கு, ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கிறது. செரிமான சக்தியைத் துாண்ட உதவுகிறது.
சுண்டைக்காய் கிடைக்காத காலங்களில், சுண்டை வற்றலை பயன்படுத்தலாம். ஆஸ்துமா, வறட்டு இருமல், மார்புச் சளி, காசநோய் கோளாறு உள்ளவர்கள், தினமும், 20 சுண்டை வற்றலை சிறிது நல்லெண்ணையில் வறுத்து சாப்பிட்டு வந்தால், நோய் கட்டுப்படும்.