வைட்டமின் டி தரும் உலர் பழங்கள்..!
வைட்டமின் டி உடலில் குறைந்தால் எலும்பில் இருந்து கால்சியம் அயனிகள் வெளியேறி எலும்புகள் பலவீனமாகும்.
தினசரி உணவு முறையில் உலர் பழங்கள் மற்றும் கொட்டைகளை சேர்ப்பது வைட்டமின் டி அதிகரிக்க உதவும்.
தினமும் 5 பாதாம் கொட்டைகளை இரவு ஊறவைத்து மறுநாள் காலையில் தோல் உரித்து சாப்பிட வேண்டும்.
கொடிமுந்திரி, அல்லது உலர்ந்த பிளம்ஸ், நார்ச்சத்து நிறைந்தவை மட்டுமல்ல, உங்கள் வைட்டமின் டி உட்கொள்ளலுக்கும் பங்களிக்கின்றன.
பேரீச்சம்பழத்தில் வைட்டமின் டி நிறைந்துள்ளது. ஆஸ்டியோபோராசிஸை தடுக்க தினமும் சிறிது பேரீச்சம்பழம் சாப்பிடுவதை வழக்கப்படுத்தி கொள்ளுங்கள்.
உலர் ஆப்ரிகாட்டில் வைட்டமின் டி மற்றுமின்றி இரும்பு, பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற தாதுக்களும் உள்ளன.
தினமும் 10 திராட்சையை இரவில் ஊறவைத்து மறுநாள் காலையில் தண்ணீரோடு மென்று உண்ணலாம்.
மேலும் தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் சூரிய ஒளியில் இருந்தால் உடலுக்கு தேவையான அளவு வைட்டமின் டி பெறலாம்.